We have translated information about the Essential Services Commission in Tamil.
Tamil
எம்மைப் பற்றி
அத்தியாவசிய சேவைகள் ஆணையம் விக்டோரியாவின் சுயாதீனப் பொருளாதார ஒழுங்குமுறை அமைப்பாகும். மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளின் விலை, தரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பாக விக்டோரியா நுகர்வோரின் நீண்டகால நலன்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
நாங்கள் விக்டோரியாவின் ஆற்றல், நீர் மற்றும் போக்குவரத்துத் துறைகளை ஒழுங்குபடுத்துகிறோம், மேலும் உள்ளூர் ஆட்சிப் பிரிவுக்கான வீத வரம்பு முறையை நிர்வகிக்கிறோம்.
விக்டோரியா ஆற்றல் மேம்பாட்டுத் திட்டத்தையும் நாங்கள் ஒழுங்குபடுத்துகிறோம், இது விக்டோரியா வாசிகள் தங்கள் ஆற்றல் கட்டணங்களையும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் விலைத் தள்ளுபடி செய்யப்பட்ட ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.
உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், தயவுசெய்து TIS National ஐ 131 450 என்ற எண்ணில் அழைத்து, அத்தியாவசிய சேவைகள் ஆணையத்தை 1300 664 969 என்ற எண்ணில் அழைக்கும்படி கோருங்கள். எங்கள் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும்.